நூறு (100) நூல்களுக்கு மேல் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள இந்தியா பள்ளப்பட்டி ஜாமிஆ அல் உஸ்வதுல் ஹஸனா (JAMIA AL USWATUL HASANA) ஷரீஅத் கல்லூரியில் கி.பி.1997ம் ஆண்டளவில் மௌலவிப் பட்டம் பெற்ற இலங்கை குருநாகல் மல்லவப்பிட்டியைச் சேர்ந்த பன்னூலாசிரியர் மௌலவீ முஹம்மத் ரஸீன் -ஹஸனீ (ஃபாழில் - மழாஹிரீ) அவர்களுக்கும் "விஷேட அபிமன் விருது " வழங்கி வைக்கும் விழா 2026 மார்ச் மாதம் 12 ம் தேதி கொழும்பில் மிக விமர்சையாக நடைப்பெற்றது.
இவர்கள் கு/மல்லவப்பிட்டி மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மத் வாபன் ஆசிரியர் மற்றும் ஹாஜியானி சித்தி ஹனிய்யா ஆகியோரின் அன்பு புதல்வர் ஆவார்.
ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேலாக, பல துரைச்சார்ந்த அறிவியல்,ஆத்மீகம்,வரலாறு,சமயம், சிறுவர் இலக்கியம், மனித நேய ஒழுக்கவியல்,மொழி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என நூறு(100)க்கும்அதிகமான விதர்ப்பமான தலைப்புகளில் நூல்களை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதி வெளியிட்டு மக்கள் சேவைகள் புரிந்தமைக்காக,
ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அரபுக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆசிரியராக சேவைகள் புரிந்தமைக்காக, மேலும் பல தொண்டு நிறுவனங்களின் ஊடாக இலங்கை நாட்டு மக்களுக்கு ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலாக சேவைகள் புரிந்தமைக்காக
என்று எல்லா துறைகளின் ஊடாக இலங்கை நாட்டு மக்களுக்கு சேவைகள் புரிந்தமைக்காகவும்,சேவைகள் புறிந்துக் கொண்டிருப்பதற்காகவும் வழங்கப்படும் பல துறைச் சமூகச் சேவைகளை உள்ளடக்கும் சேவைகளுக்குரிய மிக உயரிய விருதான SRI LANKABIMANI KEERTHI SRI VISHWA இலங்கை நாட்டு பிரஜை ஒருவராக இருந்துக் கொண்டு பெரும் சேவைகளளை நாட்டு மக்களுக்கு புரியக்கூடியவர்)
என்ற மிக உயரிய விருதுக்காக அவர்களும் தெரிவுசெய்யப்பட்டு அவ்விருது அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இவ்விருதுக்கு கி.பி.2026 ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மொத்தம் 85 பேர்கள் மட்டுமே தெறிவுச்செய்யப்பட்டிருந்தார்கள்.அதிலும் குறிப்பாக அவர்களுல் தெறிவு செய்யப்பட்ட ஒரே இஸ்லாமிய ஆண் மகன் இவர் மாத்திரமமே!மேலும் இவ்விருதைப்பெற்ற ஒரே மௌலவிக்கு உரித்தானவரும் இவர் மாத்திரமே!
கி.பி.2026 ம் வருடம் மார்ச் 12 ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் (BMICH-BANDARANAYAKA MEMORIAL INTERNATIONAL CONFERENCE HOLE )சினிமா லோஞ் கேட்போர் கூடத்தில் இவ்விருது வழங்கும் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கை அரசாங்கத்தில் எண் S/0022643 என்ற இலக்கத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட மேலும் உலகளாவிய ரீதியில் சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடன் செயல்படும் SRI RAJAKEEYA PADANAMA (ශ්රී රාජකීය පදනම) எனும் சங்கத்தின் மூலமே இவ்விருது வழங்கி வைக்கக்கூடிய இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இஸ்லாம் மார்க்க அறிஞர்கள் (மௌலவிகள்) மத்தியில் தமிழ் மொழியைப் போன்று சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பது மிகக் குறைவே! அதற்கு மத்தியில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பணி புரியும் ஆசிரியர்கள் இருப்பதும் மிகவும் குறைவே! அந்த மும்மொழிகளிலும் எழுத்து பணியில் ஈடுபடுவோரை சந்திப்பதற்குகிடைப்பதும் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகே!
குருநாகல் மாவட்டத்தில் மல்லவப்பிட்டிய ஊரில் பிறந்த அவர்கள் ஆரம்ப கல்வியை பெற்றது குருநாகல் ஷ்ரீமத் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயத்தில் ஆகும். பின்பு தாருல் உலூம் ஹாஷிமிய்யஹ் அரபுக் கல்லூரியில் மார்க்க கல்வியை கற்று, பின்பு இந்தியாவில் தமிழ்நாடு பள்ளப்பட்டி எனும் இஸ்லாமிய ஊரில் ஜாமிஆ அல் உஸ்வதுல் ஹஸனா என்ற ஷரீஅத் கல்லூரியில் (கி. பி. 1997 ம் ஆண்டு)ஹஸனீ எனும் மௌலவி பட்டத்தை பெற்றுக் கொண்டார். பின்பு இந்தியாவில் நவதில்லியில் ஸஹாரன்பூர் எனும் பெறு ஊரில் அமைந்துள்ள ஜாமிஆ மழாஹிருல் உலூம் அறபுக் கல்லூரியில் (கி. பி. 1998ம் ஆண்டு) தவ்ரத்துல் ஹதீஸ் எனப்படும் நபிமொழித் துறைக்கான ஹதீஸ் கலை பட்டப் படிப்பை பூர்த்திச் செய்து அக்கலையில் ஃபாழில்-மழாஹிரீ எனும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். அதே வருடம் ஜாமிஆ தாருல் உலூம் தேவ்பந்த் மத்ரஸாவிலும் கல்விக்கான சில சான்றிதல்களையும் பெற்றுள்ளார்.
மேலும் இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (The Open University of Sri Lanka ) இரண்டு வருடங்களுக்கான LSC 1203, LSC 1204 சிங்கள மொழி கற்கைகள் பாட நெறியை முழுமைப்படுத்தி சான்றிதழ் பெற்றவர். மேலும் இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ( University Of Colombo -Sri Lanka ) ஆங்கில மொழிக்கான F.C.in English-No.07 பாடநெறியை முழுமைப் படுத்தி சான்றிதழ் பெற்றவரும் ஆவார்..



0 Comments