Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நாளைக்கு போய்ப் பார்க்கலாம்…” என்று நாம் தள்ளிப்போடும் ஒரு சந்திப்பு, சில நேரங்களில் வாழ்நாள்முழுவதும் நமக்கு கிடைக்காமல் போய்விடலாம் ஜாக்கிரதை!

 

நாளைக்கு போய்ப் பார்க்கலாம்…” என்று நாம் தள்ளிப்போடும் ஒரு சந்திப்புசில நேரங்களில் வாழ்நாள்முழுவதும் நமக்கு கிடைக்காமல் போய்விடலாம் ஜாக்கிரதை!

துபாயிலிருந்து யாரிடமும் சொல்லாமல்குடும்பத்தினருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்றஆசையில் இலங்கைக்கு விமானம் ஏறிய ஒரு மகன்வாப்பாவிடமும் உம்மாவிடமும் கூட தான் வருவது பற்றிஅவன் சொல்லவில்லைதிடீரென வீட்டிற்குச் சென்று நிற்கும்போதுதன்னைப் பார்த்ததும் வாப்பாவின்முகத்தில் தெரியும் அந்த சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் ரசிக்க வேண்டும் என்பதுதான் அவனுடையஆசை… 


ஆனால்ஊருக்கு வந்த அந்த மகன் முதலில் ஓடிச்சென்றது வாப்பாவைத் தேடி வீட்டிற்கு அல்லவாப்பாஉறங்கிக் கொண்டிருக்கும் கபுறுக்குத்தான்.


 “அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா…” 

என்று சொல்லிவிட்டுஅந்த மண்ணை பார்த்தபடி நின்றபோதுஅவனுடைய மனம் எவ்வளவு வலித்திருக்கும்என்பதை அவன் முகமே சொல்லியது.


கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவன் மெதுவாக சொன்னான்:

எல்லாரையும் பார்த்துட்டேன்… இனிமேல் வீட்டுக்குப் போய் உம்மாவைப் பார்க்கணும்நான்வந்திருக்கிறதுகூட உம்மாவுக்குத் தெரியாது…” 


வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் ஊருக்குத் திரும்பும் ஒவ்வொரு பயணத்திற்குப் பின்னாலும் இப்படிப்பட்டஆயிரம் கதைகள் இருக்கின்றனசிலர் அரும்பு மீசை எட்டிய காலத்தில் சிட்டிஸன்  கனவில் புலம் பெயர்ந்துஅரும்பு மீசை கோடை வெயிலில் வாடிய நரை மீசையுடன் பல வருடங்களுக்குப் பிறகு பெற்றோரைப் பார்க்கஓடி வருகிறார்கள்அந்தோ பரிதாபம்.....என்ன பலன்


சிலர் வந்து சேரும் நேரத்தில்தாங்கள் பார்க்க ஆசைப்பட்ட ஒருவர் இந்த உலகத்தில் இல்லாமல்போயிருப்பதை அறிகிறார்கள்

காத்திருந்தவர்களைப் பார்க்க முடியாமல் போனாலும்அவர்களின் நினைவுகளை மட்டும் மனதில்சுமந்துகொண்டு திரும்ப வேண்டிய வலி… அதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்


வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு மகனுக்கும்மகளுக்கும் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசைஇருக்கும்.

ஆனால் வாழ்க்கை எப்போதும் நம்முடைய திட்டத்தின்படி நடப்பதில்லை


நாளைக்கு போய்ப் பார்க்கலாம்…” என்று நாம் தள்ளிப்போடும் ஒரு சந்திப்புசில நேரங்களில் வாழ்நாள்முழுவதும் கிடைக்காமல் போய்விடலாம் இன்று சமூக வலைதளத்தில் நான் பார்த்த ஒரு பதிவு மற்றும் வீடியோமனதை நிறைத்ததுஅதே நேரத்தில்கண்களையும் நனைத்துவிட்டது


உறவுகளே நீங்கள் கனவு காணும் பணமும் சிட்டிசன் வாழ்வும் ஒரு தந்தையின் அல்லது தாயின் அன்புக்குஈடாகுமா?  


பெற்றோர்கள் இருக்கும்போதே அவர்களைப் பார்த்துவிடுங்கள்.

அவர்களுடன் பேசிவிடுங்கள்அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்ஏனென்றால்சில உறவுகளுக்கு “பிறகு” என்ற வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்


அப்த்துல் மஜீட் ஜெஸீம்

சிரேஷ்ர ஊடகவியலாளர் 

இலங்கை 



Post a Comment

0 Comments